இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இன்னும் பெயரிடப்படாத படம் (விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது), சாட்டிலைட் உரிமை விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ - விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் விஜய் 63. இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட வீரர் மற்றும் பயிற்சியாளர் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நயன்தாரா, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷெராப்,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு, சென்னையின் பல்வேறுபகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
விஜய் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உள்ள நிலையில், அதன் சாட்டிலைட் உரிமத்தை வாங்க நான், நீ என நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.
மெர்சல் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் சேனல், ரூ.19 கோடிக்கு வாங்கியிருந்தது. சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், அதன் சாட்டிலைட் உரிமையையும் தன்னகத்தே வைத்துக்கொண்டது.
இதனிடையே, விஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனமே கைப்பற்றியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.28 கோடிக்கு இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ளது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே, அதிக மதிப்பில் விற்கப்பட்ட படத்தின் சாட்டிலைட் உரிமம் என்ற பெருமையை, படம் வெளியாவதற்கு முன்பே, விஜய் 63 படம் பெற்றுள்ளது.
விஜய் ரசிகர்கள், இதை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.