குளிர்காலம் முடிந்தவுடன் அறநிலையத்துறை சார்பில் 200 பேர் காசிக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "60 வயதுக்கு மேல், 70 வயதிற்கு உட்பட்டவர்களில் 200 நபர்களை காசிக்கு அழைத்து செல்வதற்கு மே மாதம் 4ஆம் தேதி துறையின் சார்பில் மானிய கோரிக்கையில் வெளியிட்டிருந்தோம்.

அதற்கு உண்டான செலவுத்தொகை 50 லட்சம் ரூபாயை மாநில அரசே ஏற்றுக்கொள்வதாக தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
தற்போது குளிர்காலம் முடிந்த உடன் 60-70 வயதில் இருக்கும் 200 பக்தர்களை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளோம். அவர்களுடைய பாதுகாப்பும், உடல்நலனும் முக்கியமென்று கருதுவதால் குளிர்காலம் முடிந்தவுடன் அழைத்து செல்ல திட்டமிட்டிருக்கிறோம்.
ஆன்மீக சுற்றுலாவிற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது", என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil