சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பொங்கல் பண்டிகைக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்திருக்கிறார்.
பொங்கல் பண்டிகைக்குள் இந்த பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இந்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை பொறுத்தவரை, சுமார் 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
40 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
2019ஆம் ஆண்டு இந்த புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா பெருந்தொற்று காலங்களில் சற்று கால தாமதம் ஆனது.
பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பயணிப்பதற்கு சென்னையில் 5 அல்லது 6 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
ஆனால், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு பெரிய அளவில் எளிமைப்படுத்தப்படும்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை கட்டுமானப் பணிகள் நிறைவுக்கு வருவதாகவும், மின்சார இணைப்பு போன்ற சிறிய பணிகள் நடைபெற்று வருவதால் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil