யு.பி.ஐ வசதியை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதியை சோதனை முறையில் போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் யு.பி.ஐ மற்றும் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் வழங்கப்படுகிறது. தொடுதிரை வசதி கொண்ட புதிய கருவிகள் மூலம் பயணிகள் ஏறும் மற்றும் இறங்கும் இடங்கள் தேர்வு செய்து டிக்கெட் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் செயல்பாடுகளைப் பொறுத்து சென்னை நகரில் உள்ள மற்ற பணிமனைகளில் உள்ள பேருந்துகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் காா்டு, யு.பி.ஐ ஐ.டி, மற்றும் க்.யூ.ஆா் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு பெற முடியும்.
சோதனைத் திட்டமாக இதை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்தி உள்ளது. அதன் வெற்றி, பயன்பாடு, நிறை- குறைகளை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள மற்ற பணிமனைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“