5 ஆண்டில் இல்லாத அளவு... யு.பி.எஸ்.சி. தேர்வில் 57 பேர் வெற்றி: சாதனை படைத்த தமிழக மாணவர்கள்

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகள் 2024 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 22 வெளியான நிலையில் இத்தேர்வில் மாநிலத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர்.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகள் 2024 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 22 வெளியான நிலையில் இத்தேர்வில் மாநிலத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UPSC

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் தேர்வுகள் 2024 முடிவுகள் நேற்று வெளியாகின.  கடந்த ஆண்டு 45 பேர் தேர்ச்சி பெற்றனர்.  இதில் தருமபுரியைச் சேர்ந்த பி.சிவச்சந்திரன் 23-வது இடத்தைப் பிடித்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தனது மூன்றாவது முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 25-வது ரேங்க் சென்னையைச் சேர்ந்த ஜீ ஜி ஏ.எஸ் பெற்றார்.

Advertisment

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த முதல்நிலை தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில் 14,627 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி, தனது இணையதளத்தில் வெளியிட்டு இருந்தது. 

இதில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23 ஆவது இடத்தை பிடித்துள்ளார். பவித்ரா பி அகில இந்திய அளவில் 42-வது இடத்தைப் பிடித்தார். தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடமும், அகில இந்திய அளவில் 23ஆம் இடமும்  பெற்றுள்ளார்.

சிவச்சந்திரன் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்த 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அதில் மோனிகா, தேசிய அளவில் 39-வது இடம் பிடித்துள்ளார். 

Advertisment
Advertisements

தமிழகத்தில் இருந்து மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. மேலும் யுபிஎஸ்சி தேர்வில் சக்தி துபே, ஹர்ஷிதா காயல், கோங்ரே அர்சித் பராக் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மோனிகா அகில இந்திய அளவில் 39 ஆவது இடத்தை பெற்றுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 134 பேர் பயிற்சி பெற்ற நிலையில் 50 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் தெரிவித்து இருப்பதாவது, "எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!" என்று பதிவிட்டுள்ளார். 

Upsc Results Upsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: