/tamil-ie/media/media_files/uploads/2017/12/kejriwal-main.jpg)
News Today Live Updates
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து கூறியுள்ளார்.
வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். அதன்படி, இன்று (திங்கள் கிழமை) தன் ஆதரவாளர்களுடன் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அரசியலில் முதலில் களமிறங்குவது கமல்ஹாசனா? ரஜினிகாந்தா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஷால் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் வெற்றிபெற்ற விஷால், விரைவிலேயே அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் விஷாலுக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், “உங்களின் அரசியல் வருகை பல இளைஞர்களை ஊக்குவிக்கும். நீங்கள் டெல்லிக்கு வரும்போது நாம் சந்திப்போம்”, என அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
Welcome @VishalKOfficial. Ur entry in politics will inspire many youngsters. Lets meet up when u come to Del next https://t.co/SZstIyTcRG
— Arvind Kejriwal (@ArvindKejriwal) 4 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us