Advertisment

பா.ஜ.க கூட்டணியை உதறிய அ.தி.மு.க… திருநெல்வேலி 'தில்'

சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவை பார்க்க முடியவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை அதிமுக திருநெல்வேலியில் ‘தில்’லாக உதறியுள்ளது.

author-image
WebDesk
New Update
Uraban Local Body Polls, AIADMK, BJP, Tirunelveli, aiadmk contest alone in Thisaiyanvilai town panchayat, aiadmk leave BJP Alliance, திருநெல்வேலியில் பாஜகவுடன் கூட்டணியை உதறிய அதிமுக, பாஜக, அதிமுக, திசையன்விளை, local body pollsUraban Local Body Polls, AIADMK, BJP, Tirunelveli, aiadmk contest alone in Thisaiyanvilai town panchayat, aiadmk leave BJP Alliance, திருநெல்வேலியில் பாஜகவுடன் கூட்டணியை உதறிய அதிமுக, பாஜக, அதிமுக, திசையன்விளை, local body polls

சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவை நாம் பார்க்க முடியவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையான நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக உதறும் விதமாக அதிமுக திருநெல்வேலி, திசையன்விளையில் தனித்து போட்டியிடும் அதிமுக அமைப்பு செயலாளர் அறிவித்துள்ளார்.

Advertisment

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவன்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரை மதம் மாற கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாணவி லாவன்யாவை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்திவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

பாஜக சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அதிமுக இன்றைக்கு கூட்டணியில் இருக்கிறது, இல்லை என்பது இரண்டாவது விஷயம். சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அண்ணா திமுகவை நாம் பார்க்க முடியவில்லை என்று பேசியது அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக பற்றிய நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து கடுமையான பதிலடிகள் கொடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்து, திருநெல்வேலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் அதிமுகவைப் பற்றிய தனது கருத்துகள் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதிமுகவைப் பற்றிய தனது கருத்துக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று ட்விட்டரில் விளக்கம் தெரிவித்தார்.

இந்நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்கள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஏ.கே. சீனிவாசன் கூறியுள்ளார்.

திசையன்விளை பேரூராட்சியில் 18 வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய விரும்புவதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்திக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவை நாம் பார்க்க முடியவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், பாஜகவுடனான கூட்டணியை அதிமுக திருநெல்வேலியில் ‘தில்’லாக உதறியுள்ளதாகத் தெரிகிறது.

திசையன்விளையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டத்தில் பேசிய ஏ.கே.சீனிவாசன், திசையன்விளையில் 18 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். 18 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்பதால், பாஜகவுடன் தேர்தல் கூட்டணி தேவை இல்லை என்று கூறினார்.

திசையன்விளையில் 18 வார்டுகளிலும் கிறிஸ்தவர், முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால், கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் எம். அப்பாவுக்கு ஆதரவளித்தனர். கடந்த ஆட்சிக் காலத்தில் பேரூராட்சி தலைவராக இருந்ததால் தேர்தல் உத்தியைப் புரிந்து கொண்டதால், ஏ.கே. சீனிவாசன், இந்த நகர்புற உள்ளாட்சியில் அதிமுக தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

எப்படி இருந்தாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக திருநெல்வேலி ‘தில்’லாக உதறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Local Body Election Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment