நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளும் திமுக இடங்கள் பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை என்று திமுக கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இடங்கள் பங்கீடு குறித்து நடத்திய பேச்சுவார்த்தையை இறுதி நேரம் வரை நீட்டீத்ததால் மிகவும் குறைவான இடங்களுக்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொண்டன. அதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜனவரிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதால், டிசம்பர் முதல் வாரம் கடந்துவிட்ட நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இடங்கள் பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை என்பதால் கூட்டணி கட்சிகள் கவலையடைந்துள்ளன.
ஆளும் திமுக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இடங்களைப் பங்கீடு செய்யும் பொறுப்பை அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைத்திருப்பது, கூட்டணிக் கட்சிகளின் கவலையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
கூட்டணிக் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களாக உள்ள மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் இதுவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடங்கள் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, திமுக இறுதி நேரம் வரை தாமதப்படுத்த வாய்ப்புள்ளது: என்று அவர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது செய்தது போலவே, கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களைக் கொடுத்து சமாதானப்படுத்துவார்கள் என்று திமுக கூட்டணி கட்சியினர் கவலை தெரிவிக்கின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதற்கு திமுக மாவட்ட செயலாளர்கள் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பை ஒரு சாக்காக சொல்கின்ற்னர் என்று கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர். “உண்மையில், கடந்த பதினைந்து நாட்களில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ள பாதிப்பிற்குப் பின், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தனர்.” என்பது அனைவருக்கும் தெரிந்தது என்று கூட்டணி கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், திமுக மாவட்டச் செயலர்கள் பலர் வழக்கம் போல, தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திமுக, மாவட்டச் செயலாளர்கள், தங்கள் கட்சியினரிடம் விண்ணப்பங்கள் வழங்குவதையும், விண்ணப்பஙக்ள் தடுக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடங்கள் பங்கீடு குறித்து கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் திமுக மாவட செயலாளர்களை தொடர்புகொண்டார்களா என்ற கேள்விக்கு, மாவட்டச் செயலாளர்களை அவர்களின் உதவியாளர்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், சில மாவட்டங்களில் அவர்கள் சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் கூட்டணி கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பல மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் பதிலளிக்கவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத திமுக கூட்டணி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். ஆளும் திமுக கடைசி நேரம் வரை பேச்சுவார்த்தையை நீட்டித்தால் பேச்சுவார்த்தைக்குகூட நேரம் இருக்காது என்று கூட்டணி கட்சியினர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
இதனிடையே, உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி ஜனவரி மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து சில கூட்டணி கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை காரணம் காட்டி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆளும் திமுக கூடுதல் அவகாசம் கோரலாம் என்று பேச்சுகள் எழுந்துள்ளன என்று திமுக கூட்டணி கட்சிகள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“