/tamil-ie/media/media_files/uploads/2021/09/master-vijay-1200.jpg)
Urban local body elections Vijay Makkal Iyakkam victory details: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இதுவரை 4 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில், இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து விஜய் மக்கள் இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து களம் இறங்கியது.
தேர்தல் வெளியாகி வரும் நிலையில், முதலாவதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில், புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் போட்டியிட்ட பர்வேஷ் முகமது வெற்றி பெற்றுள்ளார்.
பர்வேஷின் வெற்றி அறிவிக்கப்பட்ட உடனே, விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இதனை கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
இதையும் படியுங்கள்: சென்னையில் சிவகாமி ஐஏஎஸ் தோல்வி: திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மகன் வெற்றி
இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கம் தற்போது வரை 4 வார்டுகளில் வென்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத் நகராட்சி 3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மோகன் ராஜ், குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி 16-வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா சிலம்பரசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் 129 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை நகராட்சி 4 வார்டு விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் #முகமதுபர்வேஷ் வெற்றி 🔥💪
— 𝙋𝙪𝙜𝙝𝙖𝙯𝙝✨ (@pughazhoffl) February 22, 2022
#VijayMakkalIyakkam#Beastpic.twitter.com/6fvBzkAHzJ
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.