/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-2019-06-15T124518.269.jpg)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறு சில்லறை வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.25 கோடி மதிப்பிலான சிறு மற்றும் குறு கடன்களை தேசிய நிதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வழங்குவதற்கான உருதுணை திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் ஏப்ரல் 26 தெரிவித்தார்.
2025-26 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகளின் போது அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டும் கடன்கள், மாநில அரசின் மானியத்துடன், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பொது கொள்முதலில் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் மற்றும் எஸ்சி/எஸ்டி தொழில்முனைவோருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக, 500 தொழில்முனைவோருக்கு 50 லட்சம் செலவில் பயிற்சி வழங்கப்படும் என்றார்.
உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வணிக வளாகங்களில் எஸ்சி/எஸ்டி சமூகத்தினர் தொழில் தொடங்க அனுமதிக்கும் வகையில், 15 கோடி செலவில் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (TAHDCO) ஒரு புதிய வணிக வளாகத் திட்டத்தையும் அறிவித்தார்.
உயர் தொழில்நுட்பத் தொழில்களில் ஈடுபட்டுள்ள எஸ்சி/எஸ்டி தொழில்முனைவோர், 115 கோடி செலவில் அமைக்கப்படும் ‘பிளக் அண்ட் ப்ளே தொழில்துறை பூங்காக்கள்’ மூலம் உடனடியாக தங்கள் தொழிலைத் தொடங்க முடியும் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி சமூகங்களின் நடனம் மற்றும் இசை மரபுகளின் டிஜிட்டல் களஞ்சியம் 1 கோடி செலவில் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தகனக் கூடங்களை உருவாக்குதல், இறந்த உடல்களை கொண்டு செல்ல சிறப்பு வாகனங்களை வாங்குதல் மற்றும் 8 கோடி செலவில் மொபைல் செயலியை உருவாக்குதல் மூலம் சமூகங்களுக்கு மரணத்தில் சமத்துவத்தை ஏற்படுத்த அரசாங்கம் பாடுபடும் என்று அவர் மேலும் கூறினார்.
பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு துறையில் படிப்பைத் தொடரும் எஸ்சி/எஸ்டி சமூக உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் சில்லறை விற்பனை, பார்சல் விநியோகம் போன்ற வணிக தளங்களுடன் அஞ்சல் துறை இணைந்து செயல்படும் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.