யுனிவர்சல் டிரேடிங் சொலிசன் என்ற நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் அதிக லாபம் மற்றும் வட்டி தருவதாக போலியான வாக்குறுதிகளை அளித்து தமிழ்நாடு முழுவதும் 75,000 பேரிடம் சுமார் 1300 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமார்ந்தவர்கள் தகுந்த ஆதாரத்துடன் புகாரளிக்க காவல்துறை தரப்பில் அறிவுறுத்தியிருந்தனர். இதற்காக கோவையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க குவிந்தனர்.
/indian-express-tamil/media/media_files/qRpsg3M23N4JwI3gWFYk.jpeg)
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "காவல் துறையினரின் வழிகாட்டுதலில் ஏற்கனவே புகாரளித்த நிலையில் மீண்டும் புகாரளிக்க வந்துள்ளோம். இந்த நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
ஆனால் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. குழுவும் கலைக்கப்பட்டு விட்டது. நாங்கள் உழைத்து சம்பாதித்து சிறுக, சிறுக சேமித்த பணத்தை இழந்து தவித்து வருகிறோம். நிதி நிறுவனத்தின் பேரில் பல்வேறு இடங்களில் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கி போட்டுள்ளார்கள்.அவற்றை பறிமுதல் செய்தாலே பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை செலுத்த முடியும்" என அவர்கள் கூறினர்.
/indian-express-tamil/media/media_files/a32M1697YapC1tuukJrp.jpeg)
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“