புதுச்சேரி தி.மு.க-வினர் கூட்டணி தர்மத்தை மீறுகின்றனர் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி தி.மு.க அலுவலகத்தில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. இதில் தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மூர்த்தி “காங்கிரஸ் இங்கே வெற்றி பெருவது கஷ்டம். நாம்தான் இங்கே விழுந்து புரள வேண்டும். காங்கிரஸ்-க்கு ஒரு கலாச்சாரம் உண்டு என்று தலைவர் அடிக்கடி சொல்வார். முதுகில் குத்துவது, கொள்கை உடன்பாடு இல்லாத கலாச்சாரத்தை கொண்டது காங்கிரஸ். கலைஞர் காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பார். அதுபோல அவரே காங்கிரஸை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் பேசாமல் இருக்க வேண்டும் தேர்தல் வரட்டும் அமைப்பு முடிவு செய்யும். நாம் எம்.பி சீட் கேட்டக வேண்டும்” என்றும் அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில் “ புதுச்சேரி தி.மு.க-வினர் கூட்டணி தர்மத்தை மீறுகின்றனர். கட்சிகளை வளர்க்க எல்லோருக்கும் உரிமையுண்டு. ஆனால் தவறாக விமர்சிக்கக்கூடாது. தரக்குறைவான விமர்சனம் செய்து கூட்டணியில் தி.மு.கவினர் குழப்பம் செய்ய வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“