3 ஆண்டுகள் சிறை.. 5 லட்சம் அபராதம்! யார் இந்த விவி மினரல் வைகுண்டராஜன்?

விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும், நான்காவது குற்றவாளியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டது.

v v minerals vaikundarajan case v v minerals : மணல் அள்ளுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற 4 லட்சம் ரூ கொடுத்த வழக்கில் வி.வி.மினரல் உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து டில்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 லட்சம் அபராதமும் அடங்கும்.

திருநெல்வேலி , ராதாபுரம், திருவெம்பாலபுரம் கடற்கரையில் மணல் அள்ளுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வைகுண்டராஜன், மத்திய சுற்றுச்சூழல் துறை இணை இயக்குனர் நீரஜ்கட்டாரிக்கு ரூ.4 லட்சம் கொடுத்த வழக்கில் 2016 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான புகாரில், லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி நீரஜ் கட்ரி, லஞ்சம் கொடுத்த வைகுண்டராஜன் மற்றும் லஞ்சம் கொடுக்க உதவியதாக வி.வி. மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கில், வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வி.வி.மினரல் நிறுவனத்துக்கு 10 லட்ச ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.வைகுண்டராஜனின் அலுவலக ஊழியர் சுப்புலட்சுமி என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டணையும், 2 லட்ச ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சிபிஐ-யால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி 19ந்தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1ந்தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் நேற்று வெளியாகின.

அதன்படி, முதல் குற்றவாளியாக நீரஜ் கட்ரியும், இரண்டாவது குற்றவாளியாக வைகுண்டராஜனும்,மூன்றாவது குற்றவாளியாக லஞ்சம் கொடுக்க உதவிய விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும், நான்காவது குற்றவாளியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டது.
.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: V v minerals vaikundarajan case v v minerals vaikundarajan arrest news7 owner vaikundarajan

Next Story
அனைவருக்கும் இலவச கான்கிரீட் வீடு : அடுத்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express