தமிழகத்தில் நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனிக்கிழமையன்று ஒரே நாளில் 3.26 லட்சம் பேர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். இதனோடு சேர்த்து தமிழ் நாட்டில் தடுப்பூசி அளவுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. நோய்த்தடுப்பு பிரிவின் கூற்றுப்படி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் குறைந்தது 21% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது. மேலும் 7% பேர் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டனர். 18-44 வயதிற்குட்பட்டோர்களில், 5% பேர் இதுவரை அரசு தடுப்பூசி மையங்களில் முதல் டோஸை செலுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில், பல மாவட்டங்களில் போதுமான இருப்பு இல்லாததால் மாநிலத்தில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்தோடு வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் சனிக்கிழமையன்று, தமிழ்நாடு 4.26 லட்சம் டோஸ்களில் 1.26 லட்சம் டோஸ் கோவாக்சின் மற்றும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் ஆகியவற்றைப் பெற்றது. அவை அன்று மாலையே மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. ஜூன் 1 முதல், மாநிலத்திற்கு 13.3 லட்சம் டோஸ் கிடைத்துள்ளது, மேலும் இந்த மாத இறுதிக்குள் மேலும் 29.2 லட்சம் டோஸை எதிர்பார்க்கிறது.
சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், மாநிலத்திற்கு அதிகமான தடுப்பூசிகள் வழங்குவதற்காக மத்திய அரசின் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது, எனவே தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறையவில்லை. முதல்வர் ஸ்டாலின் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கோரி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார், என்றார். மேலும், “அவர் விரைவில் பிரதமர் மோடியுடன் நேரடியாக கூடுதல் தடுப்பூசிகள் வழங்குவது குறித்து பேசுவார்” என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுவரை, மாநிலத்திற்கு 1.1 கோடி டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது மற்றும் 1.01 கோடி அளவுகளைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், தினசரி தடுப்பூசி வீணடிப்பும் கிட்டத்தட்ட இல்லை. ஒட்டுமொத்த தடுப்பூசி வீணாக்கப்பட்ட அளவு மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 8.3 சதவீதத்திலிருந்து தற்போது 2% க்கும் குறைந்தது. “முதல் மூன்று மாதங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான அளவு வீணடிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில், தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வீணாவது குறைக்கப்பட்டது, ”என்றார். அரசு மையங்களில் உள்ள தடுப்பூசிகளைத் தவிர, மே 1 முதல் 3.59 லட்சம் பேர் தனியார் மையங்களில் இருந்து தடுப்பூசி எடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil