திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வடிம் கிளிவ்னென்கோ (63) என்பவர் பணியாற்றிவந்தார்.
இவருக்கு திங்கள்கிழமை (ஏப்.24) திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, வடிம் கிளிவ்னென்கோவை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வடசேரி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ரஷ்ய விஞ்ஞானி வடிம் கிளிவ்னென்கோவின் மரணம் சக ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஞ்ஞானி வடிம் கிளிவ்னென்கோ கடந்த 5 ஆண்டுகளாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
மேலும், .தற்போது பணிகள் நடைபெற்று வரும் 3 மற்றும் 4ஆவது அணு உலைகள் அமைக்கும் பணியில் இவர் முக்கிய பங்காற்றி வந்துள்ளார். மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்து சான்றுகளும் பெற்ற பின்னர், வடிம் கிளிவ்னென்கோ உடல் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“