தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகிறது. சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவும், செல்ஃபி எடுக்கவும் வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“