காவிரி, தாமிரபரணி புஷ்கர விழாவை தொடர்ந்து மதுரையில் வைகை பெருவிழா ; சமூகவலைதளங்களில் ஆர்ப்பரிக்கும் எதிர்ப்பு அலை

Vaigai peruvizha 2019 : வைகை நதியின் புனிதம் காக்கும் பொருட்டு வைகை பெருவிழா ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை மதுரையில்...

வைகை நதியின் புனிதம் காக்கும் பொருட்டு வைகை பெருவிழா ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை மதுரையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

அகில பாரதிய சன்னியாசிகள் சங்கமும், மதுரை மக்களும் இணைந்து, முதல் முறையாக இந்த வைகை பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். வைகை ஆற்றை பாதுகாத்தல், விவசாயத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளை வலியுத்தி இந்த பெருவிழா நடத்தப்பட உள்ளது. . திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் விவசாயிகள் இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

 

madurai, vaigai river, vaigai perivizha

madurai, vaigai river, vaigai perivizha

நிகழ்ச்சி நிரல்

ஜூலை 24 – வைகை பெருவிழா நிகழ்ச்சி துவக்கம்
ஜூலை 25ம் தேதி – துறவியர் மாநாடு
26ம் தேதி பெண்கள் மாநாடு
27ம் தேதி – திருமால் அடியார்களின் சங்கமம்
28ம் தேதி – சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ மாநாடு
29ம் தேதி – பூஜாரிகள் பேரமைப்பு மாநாடு
30ம் தேதி – சிவனடியார்கள் மாநாடு
31ம் தேதி – பாரதிய பசுவின பாதுகாப்பு மாநாடு
ஆகஸ்ட் .1ம் தேதி – முத்தமிழ் மாநாடு மற்றும் இளைஞர் மாநாடு
2ம் தேதி – நதிநீர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் மாநாடு
3ம் தேதி – சன்மார்க்க மாநாடு மற்றும் சித்தர்கள் மாநாடு – ஆடிப்பெருக்கு, வைகையில் நீராடல் நிகழ்ச்சி
ஆக.4ம் தேதி – அனைத்து சமய, சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாநாடு மற்றும் நிறைவு விழா

வைகை பெருவிழா நிகழ்ச்சிக்கு ஆதரவைவிட எதிர்ப்பே அதிகளவில் உள்ளது. மதுரை மாநகரின் பல இடங்களில், இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிகளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சமூகவலைதளங்களிலும், இந்த நிகழ்ச்சிக்கு எதிராகவே பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏன் இந்த எதிர்ப்பு : மதுரை மதச்சார்பற்ற நகரம்; மதுரை சித்திரை திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று அமைதியாக கொண்டாடுகின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு, வைகை பெருவிழா என்ற பெயரில் வைகை நதியை தனியாருக்கு தாரை வார்க்கப்பார்க்கிறது என குற்றம்சாட்டுகின்றனர். தமிழர்களின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் நிகழ்வு தான் மதுரை சித்திரை திருவிழா. வைகைப் பெருவிழா என்று அதில் காவியை நுழைக்க பார்க்கிறது RSS அமைப்பு. . இதனை தடுக்கவில்லையென்றால், விநாயகர் ஊர்வலத்தின் போது ஏற்படும் பதற்றமான நிலை தான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போதும் ஏற்படும் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வைகை பெருவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், #SaveVAIGAIfromRSS என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் , சென்னை அளவில் டிரெண்டாகி உள்ளது.

 

madurai, vaigai river, vaigai perivizha

madurai, vaigai river, vaigai perivizha

கவிதா

தமிழ்நாட்டை சேர்ந்த தமிழரான கள்ளழகருக்கும், வடநாட்டு அம்மண சாமியார்களுக்கும் என்னடா சம்மந்தம் ???

கவாஸ்கர் பரமானந்தா

தமிழர்களின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் நிகழ்வு தான் மதுரை சித்திரை திருவிழா.

கரிகாலன்

கார்த்திக் .ஜே

வைகைப் பெருவிழாவா? வைகைக்கு மூடுவிழாவா? வைகையைக் காக்க அனைவரும் குரலெழுப்புவோம்.

நியூட்ரினோ ஆய்வு திட்டத்தின் பெயரால் வைகை நதியை நாசமாக்குகின்றனர்; அவர்களே இப்போது வைகையை பாதுகாப்போம் என்பதா?
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஓடும் ரயிலை வைகை ஆற்று பாலத்தில் 4நாட்கள் மறித்து நிறுத்தியபோது வராத கும்பல் வைகை பெருவிழா என வருவது யாரை ஏமாற்ற..? என்று சமூகவலைதளங்களில், நெட்டிசன்கள், வைகை பெருவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close