காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள தண்ணீர் அருந்தா போராட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில், வைகோ, ஜி.கே.வாசன், காதர் மொய்தீன் உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்றனர்.
மேடையில் அமர்ந்திருந்த வைகோ நடைபெறுவது தண்ணீர் அருந்தா போராட்டம் என்பதை அறியாமல், வெந்நீர் தருமாறு கேட்டு வாங்கி அருந்தினார். இதைப் பார்த்து அருகில் இருந்த மற்றவர்கள், வைகோவுக்கு இந்த போராட்டம் தண்ணீர் அருந்தாப் போராட்டம் என்று விளக்கினர்.
இதையடுத்து எழுந்து விளக்கமளித்த வைகோ, இது தண்ணீர் அருந்தா போராட்டம் என்பதைத் தம்மிடம் முன்கூட்டியே கூறாமல் விட்டுவிட்டார்கள் எனத் தெரிவித்தார். ஆனால் போரட்டம் நடத்தும் இடத்தில் தண்ணீர் அருந்தா போரட்டம் என்று பெரிய பேனர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வைகோவில் இந்த செயல்பாட்டை வழக்கம் போல், நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அதன் தொகுப்பு இதோ,