பரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு – வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

Vaiko : காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை.

chennai high court, vaiko. farooq abdullah, mdmk, anna birthday, habeas corpus plea
chennai high court, vaiko. farooq abdullah, mdmk, anna birthday, habeas corpus plea, சென்னை உயர்நீதிமன்றம், வைகோ, பரூக் அப்துல்லா, மதிமுக, அண்ணா பிறந்தநாள், ஆட்கொணர்வு மனு

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாவுக்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. எனவே, உச்சநீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்காக ஆட்கொணர்வு மனுவை, வைகோ தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு , உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vaiko farooq abdullah chennai high court habeus corpus plea

Next Story
சென்னையில் செப்டம்பர் 12ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்…chennai power cut, power cut in chennai today, chennai power cut today, power cut in chennai, tangedco, tneb, tneb reading
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express