Vaiko got arrested : இன்று மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கிளம்பி தமிழகம் வந்தடைந்தார்.
மேலும் படிக்க : மோடி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை காண வரதாவர் ஏன் இந்த நிகழ்விற்கு மட்டும் வரவேண்டும் என்று கூறி ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடந்து வருகிற இந்நேரத்தில் மதிமுக தொண்டர்கள் கறுப்புக் கொடியுடன் இன்று காலை முதலே, மதுரை பெரியார் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மோடி மதுரைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக மதிமுகவின் தலைவர் வைகோ இந்த போராட்டக் குழுவில் இணைந்து கொண்டார். கறுப்பு நிறக் கொடிகள், பலூன்கள் என்று மோடியின் வருகைக்கு எதிராக கோஷங்கள் முழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இயற்கை எங்களை வஞ்சித்த போது ஒருமுறையாவது இங்கு வந்து மக்களை பார்த்திருக்கலாம் மோடி. தமிழகத்தின் இயற்கையையும், விவசாயத்தையும் அழிக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்று வைகோ அப்போது கூறினார்.
திருமுருகன் காந்தி கைது
கறுப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டத்தால் வைகோ உள்ளிட்டோரை காவல் துறை கைது செய்தது. அதே போல், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அவ்வியக்கத்தின் திருமுருகன் காந்தி முகிலன் உள்ளிட்டோரை கைது செய்தது காவல்துறை.