தமிழகத்தில் வரும் 2026-ல் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க என பல்வேறு கட்சிகளும் தத்தம் பிரசார யுக்திகளை கையாண்டு களத்தில் சழன்றுக்கொண்டிருக்கின்றது. அந்தவகையில், தி.மு.க-வின் கூட்டணி கட்சியான ம.தி.மு.க திமுகவை ஆதரித்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 8 இடங்களில் வைகோ பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. அதற்கான பிரச்சார அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ம.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கழகத்தினர், தமிழக உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள், தமிழ்நாட்டின் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டிட கழக நிர்வாகிகள் தக்க ஏற்பாடுகளைச் செய்வார்கள்.
2025 ஆகஸ்டு 9, இடம் - தூத்துக்குடி, பொருள்: ஸ்டெர்லைட் வெளியேற்றம்
2025 ஆகஸ்டு 10, இடம்: கடையநல்லூர், பொருள்: மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும்
2025 ஆகஸ்டு 11, இடம்: கம்பம், பொருள்: முல்லைப் பெரியாறும்; நியூட்ரினோவும்
2025 ஆகஸ்டு 12, இடம்: திண்டுக்கல், பொருள்: விவசாயிகள், மீனவர்கள் துயரம்
2025 ஆகஸ்டு 13, இடம்: கும்பகோணம், பொருள்: மேகதாதுவும், மீத்தேனும்
2025 ஆகஸ்டு 14, இடம்: நெய்வேலி, பொருள்: நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
2025 ஆகஸ்டு 18, இடம்: திருப்பூர், பொருள்: இந்தி ஏகாதிபத்தியம்
2025 ஆகஸ்டு 19, இடம்: திருவான்மியூர், பொருள்: சமூக நீதியும்; திராவிட இயக்கமும்
இவ்வாறு ம.தி.மு.க தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்.