Mdmk Chief Vaiko | INDIA bloc | Rahul Gandhi | Cm Mk Stalin: நாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
நாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ) அமைக்கப்பட்டு தமிழகத்தில் பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி (I.N.D.I.A) அதன் பிரதமர் வேட்பாளர் யார்? என்று தற்போது வரை தெரிவிக்கவில்லை. இதனை என்.டி.ஏ கூட்டணி அவ்வப்போது கேள்விக்குள்ளாக்கி வருகிறது. இருப்பினும், ராகுல் காந்தியை இந்தியா கூட்டணி அதன் பிரதமர் வேட்பாளார் முகமாக காண்பிக்கப்பித்து வருகிறது. ஆனால், அது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், திருச்சியில் இன்று (சனிக்கிழமை) ம.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் வைகோ இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று பளிச்சென்று கூறியிருக்கிறார். 74 தலைப்புகளின் கீழ் பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய வைகோ, "இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை ம.தி.மு.க வழிமொழிகிறது" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“