நேரு முதல் மன்மோகன்சிங் வரை இப்படி இல்லை; வெளிநாட்டுப் பயணம் பற்றி பிரதமர் விளக்கம் அளிக்க வைகோ வலியுறுத்தல்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்தியாவின் பிரதமர்களான நேரு முதல் மன்மோகன் சிங் வரை வெளிநாடு சென்றுவந்தால் அவர்களே நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார்கள். அதனால், பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் பற்றி அவரே விளக்கம் அளிக்க வேண்டும் என்று வியாழக்கிழமை மாநிலங்களவையில் வலியுறுத்திப் பேசினார்.
Vaiko questions on PM Modi foreign visits, மதிமுக வைகோ, Vaiko questions on Gotabaya Rajapaksa visits to India in Rajya Sabha, வைகோ மாநிலங்களவையில் கேள்வி, Vaiko speech in Rajya Sabha, Vaiko MDMK, Vaiko, Vaiko MDMK Chief
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்தியாவின் பிரதமர்களான நேரு முதல் மன்மோகன் சிங் வரை வெளிநாடு சென்றுவந்தால் அவர்களே நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார்கள். அதனால், பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் பற்றி அவரே விளக்கம் அளிக்க வேண்டும் என்று வியாழக்கிழமை மாநிலங்களவையில் வலியுறுத்திப் பேசினார்.
Advertisment
மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி மதிமுகவினருடன் கைதானார். பின்னர், மாலையில் வைகோவும் அவருடன் மதிமுகவினரு விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, மாலையில், நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டார். அப்போது, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி கடந்த ஒரு மாதமாக மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் பற்றி அறிக்கை வாசித்தார். இந்த அறிக்கை குறித்து பேசிய வைகோ, பிரதமர் மோடி டொனால்ட் டிரம்ப், ஷி ஜிங்பிங், உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..
பிரதமர் நேரு காலம் முதல் மன்மோகன் சிங் காலம்வரை பிரதமர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தால், ஒவ்வொரு பயணத்துக்குப் பிறகும், அது பற்றி மாநிலங்களவைக்கு வந்து அவர்களே விளக்கம் அளித்தார்கள். நான் உறுப்பினராக இருந்த காலம் முதல் அது நடைமுறையில் இருந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜிங்பிங் உள்ளிட்ட ஒட்டு மொத்த உலகின் முக்கிய தலைவர்களை எல்லாம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால், அவர் அது குறித்து மாநிலங்களவைக்கு வந்து விளக்கம் அளிக்காதது ஏன்?
அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கிறார். ஜெய்சங்கர் வெளியுறவுத்துறையில் பாண்டித்தியம் பெற்றவர்தான் ஆனால், அவர் பிரதமர் செய்ய வேண்டிய வேலையை செய்யக்கூடாது. ஒரு வேளை அவர் ஜெய்சங்கர் பிரதமரானால் அப்போது அது பற்றி பேசாலாம்.
அண்மையில் வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் இலங்கை கொழும்புவுக்கு சென்று இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பூங்கொத்து கொடுத்தார். அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சவுக்கு பூங்கொத்து கொடுக்கவா சென்றார்? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய வைகோ, இலங்கை அதிபராக வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச சிங்களவர்கள் மட்டும் வாக்களித்துதான் வெற்றிபெற்றதாகக் கூறினார். இனி தமிழர்கள் வாழும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் ரோந்து வருவார்கள் என்று கூறியிருக்கிறார்.
இலங்கையில், எங்களுடைய தமிழ் சொந்தங்கள் கொல்லப்பட்டதால் கோடிக்கணக்கான தமிழர்கள் நெஞ்சில் கோபத்தீயும் வேதனைத் தீயும் எரிகிறது. இப்படி பற்றி எரிகிற தீயை மத்திய அரசு பெட்ரோலை ஊற்றி இருக்கிறது.” என்று கடுமையாகப் பேசினார். அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் தாங்கள் இப்படி பேசக் கூடாது என்று கூறினார். ஆனால், தான் பேசுவேன் என்று கூறினார்.
வைகோவின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, தான் அனைத்து இலங்கையருக்கும் அதிபராக இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், அனைத்து தரப்பினரும் நன்மையை கருத்தில்கொண்டுதான் நாங்கள் செயல்படுவோம்.” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட வைகோ, தங்களின் அழைப்பின் பேரில்தான் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகிறாரா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், நாங்கள் அழைத்ததன் பேரில்தான் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகிறார்.” என்று கூறினார்.