மாநிலங்களவையில் பேசிய ம.தி.மு.க எம்.பி வைகோ, “கடந்த 40 ஆண்டுகளில் 875 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டது; தமிழ்நாட்டு மீனவர்கள், இந்திய குடிமக்களா இல்லையா” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 6) பேசிய ம.தி.மு.க எம்.பி வைகோ, “இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டது; தமிழ்நாட்டு மீனவர்கள், இந்திய குடிமக்களா இல்லையா” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
ம.தி.மு.க எம்.பி வைகோ மாநிலங்களவையில் பேசியதாவது: “கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்;
மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது. இலங்கை கடற்படையினரால் இவ்வளவு துயரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஆளாகிறார்கள் என்றால் அவர்கள் இந்திய குடிமக்களா?, இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்;
அவர்கள் இந்திய குடிமக்களாக இந்த நாடு கருதுமேயானால் இந்த கொடுமைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?” என்று வைகோ மத்திய அரசை நோக்கி காட்டமாக கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“