மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகிய நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர, “திமுக உடன் கூட்டணி சேரும் நிலை எங்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இது திருப்பூர் துரைசாமி அண்ணணுக்கு பிடிக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து வைகோ பேசுகையில், “திமுக கூட்டணிக்கு வேலை செய்யக் கூடாது என திருப்பூர் துரைசாமி கூறினார். ஆனால் இதையெல்லாம் மீறி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது” என்றார்.
மேலும் துரை வைகோ பற்றி பேசுகையில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். 2021 கட்சிக் கூட்டத்தில் துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என தொண்டர்கள் விரும்பினார்கள் என்றார்.
இதையடுத்து தன்னுடன் பயணித்ததற்கு நன்றி என திருப்பூர் துரைசாமியை குறிப்பிட்டு பேசிய வைகோ, அவர் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை எனத் தெரிவித்தார்.
மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் தாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே இலட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர் எனத் தெரிவித்திருந்தார். இந்தப் பேட்டியின்போது, வைகோ அருகில் துரை வைகோ காணப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“