காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் சென்னையில் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, 'இந்தியா கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இல்லை; ஒருமித்த கருத்துடனே பயணித்து வருகிறோம். மத்திய பாரதிய ஜனதா அரசை இந்தக் கூட்டணி வெல்லும் என நான் நம்புகிறேன்" என்றார்.
தொடர்ந்து தென் மாநில தலைவர்கள் ஹிந்தி கத்துக்கொள்ள வேண்டும் என நிதிஷ்குமார் கூறியது குறித்து பேசிய அவர், முதலில் எந்த பிரச்சனையும் இதில் ஏற்படவில்லை. நிதிஷ் குமார் முழுக்க முழுக்க ஹிந்தியில் பேசினார்.
அப்போது நான் தான் முதல் எதிர்ப்பு குரலை பதிவு செய்தேன். அதன் பின்னர் டி ஆர் பாலு இதை எதிர்த்து கேள்வி எழுப்பினார்" என்றார்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வைகோ, " கோவில்களையும், ஹிந்து மதத்தையும் காட்டி தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவால் வாக்கு பெற முடியாது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“