சென்னை மெட்ரோ ரயிலில் வைகோ செல்ல இருந்த லிப்டிற்குள் ஏரிய 2 இளைஞர்களை தாக்கியதற்காக உதவியாளரை கன்னத்தில் அறைந்தார் வைகோ. இச்சம்வபம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisment
சென்னை விமானம் நிலையம் செல்வதற்காக மெட்ரோ ரயிலில் தனது மனைவியுடம் பயணித்தார் மதிமுக தலைவர் வைகோ. இவருடன் தொண்டர்கள் சிலரும் உதவியாளர்களும் துணை வந்தனர்.
மெட்ரோ ரயில் மூலம் மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திற்கு வந்த வைகோவும் அவரது மனைவியும், லிப்டில் ஏற முற்பட்டனர். அதே சமயத்தில் அவசரமாக சென்றிருந்த இளைஞர்கள் இரண்டு பேர் அதே லிப்டிற்குள் ஏறினார்கள்.
உதவியாளர் கன்னத்தில் அறைந்த வைகோ
Advertisment
Advertisements
உடனே உள்ளே இருந்த உதவியாளர்கள் அவர்களை வெளியேறும்படி கடுமையாக கூறினர். பதிலுக்கு, அவர்கள் தாம் செல்ல இருக்கும் விமானத்தை பிடிக்க நேரமானதாகவும், கையில் இருக்கும் பெட்டிகளை வைத்து கொண்டு நடக்க முடியாது எனவே அவசரமாக செல்வதால் லிப்டில் செல்ல வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதன் விளைவாக வைகோ லிப்டை விட்டு வெளியே வந்தார். ஆத்திரமடைந்த வைகோவின் உதவியாளர்கள் இரண்டு இளைஞர்களையும் கடுமையாக தாக்கினர். பதிலுக்கு கோவமடைந்த இளைஞர்கள், அவசரமாக செல்வதால் லிப்டிற்குள் ஏறினோம் இதில் என்ன தவறு, எதற்காக எங்களை தாக்கினீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் இளைஞர்களை தாக்க முயன்ற உதவியாளர்களை வைகோ தடுக்க முயற்சி செய்தார். அதே சமயத்தில் இளைஞர்களிடம், “அவங்க பண்ணது தப்பு தான் மன்னிச்சிருங்க. என்னால் அவர்களை அடிக்க முடியலை. ஏன் தெரியுமா? நீங்க அவசரம் சொன்ன உடனே உள்ளே போங்க தம்பி நான் வெளியே வந்துட்டேன்.” என்று விளக்கி கொண்டிருந்தார்.
ஆனால் இதை அவர் கூறி கொண்டு இருக்கும் வேளையில், மீண்டும் ஒரு உதவியாளர் வைகோவிடம் பேசிய இளைஞரை தள்ளி விட்டார். இதனால் அத்திரமடைந்த வைகோவும் உதவியாளர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்புக்குள்ளானது.