scorecardresearch

எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை… வைகோ சொன்ன காரணம்!

28 வருடங்களில் லட்சக்கணக்கான மைல்கள் காரில் பயணித்துள்ளேன். ஆயிரக்கணக்கான மைல்கள் நடைப்பயணமாகச் சென்றிருக்கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டு ஐந்தரை வருடங்கள் சிறையில் கழித்துள்ளேன்.எனது வாழ்க்கையையே அரசியலில் ஓரளவு அழித்துக்கொண்டேன்

எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை… வைகோ சொன்ன காரணம்!

தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று (அக். 09) நடைபெற்று வருகிறது. குருவிகுளம் ஒன்றியம், கலிங்கப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ ஆகியோர் வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “நான் என்னுடைய வாழ்க்கையின் 56 வருடங்களைப் பொதுவாழ்வில் செலவழித்துள்ளேன். அதில் 28 வருடங்களில் லட்சக்கணக்கான மைல்கள் காரில் பயணித்துள்ளேன். ஆயிரக்கணக்கான மைல்கள் நடைப்பயணமாகச் சென்றிருக்கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டு ஐந்தரை வருடங்கள் சிறையில் கழித்துள்ளேன்.

எனது வாழ்க்கையையே அரசியலில் ஓரளவு அழித்துக்கொண்டேன். இது என்னோடு போகட்டும், எனது மகனும் (துரை வையாபுரி) அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் என்பதால், அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. கட்சிக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வருகிற 20-ம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரியும்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை ஈவு இரக்கமற்ற கோரப் படுகொலை. தாலிபான்கள் செயல்பாடுகளை போல் இங்கு செய்து உள்ளனர். இதற்கு மன்னிப்பே கிடையாது நீதிமன்றத்தை கூட அவர்கள் மதிக்கவில்லை” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vaiko statement about his son election journey

Best of Express