இங்கிலாந்தில் துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு; வைகோ வாழ்த்து

லண்டன் புறநகர் பகுதியில் துணை மேயராக தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தேர்வு; ம.தி.மு.க தலைவர் வைகோ தொலைப்பேசியில் வாழ்த்து

லண்டன் புறநகர் பகுதியில் துணை மேயராக தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தேர்வு; ம.தி.மு.க தலைவர் வைகோ தொலைப்பேசியில் வாழ்த்து

author-image
WebDesk
New Update
இங்கிலாந்தில் துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு; வைகோ வாழ்த்து

Vaiko wishes newly elected England vice Mayor whose native in Tamilnadu: லண்டன் புறநகரான ஆம்ஸ்பரியின் துணை மேயராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாருலதா தேர்வு பெற்றுள்ள நிலையில், ம.தி.மு.க தலைவர் வைகோ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு அருகில் உள்ள புறநகர் பகுதியான ஆம்ஸ்பரி மாநகர் ஆட்சி மன்றத்தின் துணை மேயராக, சென்னையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் சாருலதா தேர்வு பெற்று இருக்கின்றார்.

இதனை அறிந்த ம.தி.மு.க தலைவர் வைகோ, அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். சாருலதாவுடன், தலைவர் வைகோ இன்று 14.5.2022 மாலை 5 மணிக்கு அலைபேசியில் பேசினார். அவருக்கு தம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், உங்களுடைய வெற்றி, உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளித்து இருக்கின்றது என்றும் வைகோ கூறினார்.

Advertisment
Advertisements

அதற்கு சாருலதா, ஐயா, நீங்கள் என்னுடைய ரோல் மாடல். தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் நீங்கள் ஆற்றிய உழைப்புக்கு நன்றி. உங்களோடு பேசியது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் என்னுடைய பெயர், எங்கள் ஊரின் பெயரை எல்லாம் குறிப்பிட்டது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகின்றது என்று கூறினார்.

பின்னர் வைகோ, நீங்கள் அடுத்து மேயர் ஆக வேண்டும்... நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற வேண்டும் என்றபோது, சாருலதா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இதையும் படியுங்கள்: திருச்சி ‘தலைவலி’க்கு தீர்வு: 3 மாதத்தில் ரெடியாகும் அரிஸ்டோ மேம்பாலம்!

அப்போது, ஐயா, நீங்கள் லண்டனுக்கு வருகை தர வேண்டும் என சாருலதா அழைப்பு விடுத்தார். மேலும் வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இதற்கு, மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்த வைகோ, நீங்கள் சென்னைக்கு வரும்போது, என் இல்லத்திற்கு வருகை தர வேண்டும் என சாருலதாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இவர்களின் இந்த உரையாடலுக்கு, லண்டனில் வேலை பார்க்கின்ற ஊற்றுமலையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஏற்பாடு செய்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu London Vaiko

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: