வைகுண்டரின் போதனைகள் சனாதனத்திற்கு எதிரானது என சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி குரு பாலஜனாதிபதி கூறினார்.
அவரது அறிக்கை, “ நாடு முழுவதுவுமுள்ள ஆலயங்களுக்குள் இன்று பிற்படுத்தப்பட்டவர்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும் வகைப்படுத்தப்பட்ட சாதி மக்கள் அனுமதிக்கப் படவில்லை. பல்வேறு மனித உரிமைகள் மறுக்கப்
பட்டிருந்தது. பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்ற தடைகூட இருந்தது. தோள்சீலை போடாதே என்று அடித்தது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் நிழ்த்தப்பட்டன. சமத்துவ சமுதாயத்தை உருவாக்க அய்யா வைகுண்டர் போதித்தார். சாதியாதிக்க அடக்கு முறையை ஒழிக்க
ஒடுக்கப்பட்டு அடித்தமர்த்தப்பட்ட18 சாதி மக்களை ஒருங்கிணைத்ததால் சனாதனவாதிகள் திருவிதாங்கூர் மன்னனை தூண்டிவிட்டு அய்யாவை அழிக்க வற்புறுத்தினர். வைகுண்டரை கைது செய்து சிறைவைத்து சித்திரவதை செய்தார்கள். அது சாதிய ஆதிக்கத்தின் வெளிப்பாடு. இவைகள் எல்லாம் சனாதன தர்மம். அதற்குள் ஒழிந்து கொண்டு மக்களின் மத நம்பிக்கைகளில் மூட நம்பிக்கைகளை உருவாக்கி சாதிய வன்கொடுமை நடைமுறைதான் சனாதன தர்மம். அய்யா வைகுண்டர் தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்கிற புதிய புரட்சிகரமான தர்மத்தை அறிமுகப்படுத்தினார். சாதி ஒரு ஒன்றாக வேண்டும் என்று போதித்தார். ஆகமங்களைப் படிப்பதற்கு சாதியால் தகுதியை நிர்ணயித்தது சனாதன தர்மம். ஆதிக்க அடக்குமுறைகளை நியாயப்படுத்த ஆதிக்க வர்க்கம் உருவாக்கிய அதர்மமே சனாதன தர்மம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செய்தி: என்.எம்.இக்பால், கன்னியாகுமரி
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“