தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நம்பவர் மாதத்தில் உடல் நிலை மோசமடைந்ததால், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும் அவர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள்த்தில் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். ” எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார் திரையில் நல்லவர் ; அரசியலில் வல்லவர் சினிமாவிலும் அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர் கலைவாழ்வு பொதுவாழ்வு கொடை மூன்றிலும் பாசாங்கு இல்லாதவர் கலைஞர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல்செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் தொட்டவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது காலம் வருந்துகிறேன் கண்ணீர் விடும் குடும்பத்தார்க்கும் கதறி அழும் கட்சித் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிடுட்ள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“