மறைந்த கருணாநிதி சமாதியில் அழுதுகொண்டே பாலூற்றிய வைரமுத்து

மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் பாலூற்றினார் வைரமுத்து

மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதிக்குக் காலையில் சென்று பாலூற்றினார் வைரமுத்து . தனது இரு மகன்களுடனும் சென்று இந்தத் தனது அஞ்சலியைச் செலுத்தினார்.

கருணாநிதி சமாதியில் பாலூற்றிய வைரமுத்து:

சென்னை ஆழ்வார்பேட்டையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, 7ம் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார். இவரின் இந்த மறைவுக்குப் பிறகு கோபாலபுரம் மற்றும் சிஐடி காலணி இல்லங்களில் அவரது உடல் வைக்கப்பட்டு பின்னர் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்பு அன்று இரவு 7.30 மணியளவில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி சமாதி அமைந்துள்ள இடத்திற்குச் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்தபோதே மலர் வலையம் வைத்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார் வைரமுத்து.

இந்நிலையில் இன்று காலை தனது இரு மகன்களுடன் மெரினா கருணாநிதி சமாதிக்குச் சென்று பாலூற்றி மலர்களை வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியை இழந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் வைரமுத்து பாலூற்றும்போது கண்ணீர் விட்டு அழுதார்.

இவரைத் தொடர்ந்து அவரது இரண்டு மகன்களும் கருணாநிதிக்கு பாலூற்றி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தந்தைக்கு ஆற்றும் கடமையை தான் செய்ததாக மனமுருகக் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close