"இப்படிப்பட்ட கூட்டத்தில் நான் தமிழ் வளர்க்க வெட்கப்படுகிறேன்": வைரமுத்து உருக்கம்!

ஆண்டாள் விவகாரம் குறித்தும், தன்னைச் சுற்றி வரும் எதிர்ப்புகள் குறித்தும் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வைரமுத்து தற்போது வெளியிட்டுள்ளார்

‘தினமணி’ நாளிதழில் கடந்த 8-ம் தேதி ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஆண்டாள் குறித்து கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து வைரமுத்து கருத்துக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கும் பதிவு செய்யபட்டது.

இதைத் தொடர்ந்து, வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும், தொடர்ந்து அவர் மீது வார்த்தைகளால் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. திரைத் துறையைச் சேர்ந்த பலரும் வைரமுத்துவுக்கு ஆதரவாக துணை நிற்கின்றனர். இருப்பினும், இந்து அமைப்பினர், வைரமுத்து மீதான தாக்குதலை நிறுத்தவில்லை.

இந்த நிலையில், ஆண்டாள் விவகாரம் குறித்தும், தன்னைச் சுற்றி வரும் எதிர்ப்புகள் குறித்தும் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வைரமுத்து தற்போது வெளியிட்டுள்ளார்.

×Close
×Close