மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு சிலை திறக்கப்படுவதையொட்டி, அவரைப் புகழ்ந்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மலையே சிலையானது போல் :
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பிரம்மாண்ட சிலை, கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (டிச.16) நடைபெற உள்ளது.
விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் சிலைத் திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ”முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு ஒரு கவிஞன் செலுத்தும் காணிக்கை” என கவிப்பேரரசு வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'ஒரு மலையே சிலையானதுபோல' என்ற தலைப்பில் வைரமுத்து கவிதை வாசிக்கும் வீடியோ ஒன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
கருணாநிதியுடன் வைரமுத்து
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி - கவிப்பேரரசு வைரமுத்து இடையான நட்பு அனைவரும் அறிந்த ஒன்று. கருணாநிதிக்காக நடத்தப்படும் அனைத்து விழாக்களிலும் வைரமுத்துவின் சிறப்பு உரை, கவிதை வாசிப்பு இல்லாமல் நிகழ்ச்சி முற்று பெறாது.
ப்ளிஸ் படிங்க... கருணாநிதி சிலை திறப்புக்கு ரஜினி , கமல் வருவார்களா?
இந்நிலையில், கருணாநிதியின் இறப்பு வைரமுத்துவை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இருந்த போது கருணாநிதியின் சிலைத் திறப்புக்கு தன்னுடைய காணிக்கையை வைரமுத்து ”மலையே சிலையானது போல்”கவிதை தொகுப்பு மூலம் செலுத்தியிருக்கிறார்.