12ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு, தங்கப் பேனாவை பரிசளிக்க உள்ளதாக கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
Advertisment
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு எழுதியதில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 96.38 % தேர்ச்சியடைந்தனர். மாணவர்கள் 91.45 % தேர்ச்சியடைந்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை நந்தினியை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நந்தினியை பாராட்டி பேசியுள்ளார்.
“ ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன் திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன் உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில் திண்டுகல்லுக்கு நேரில் சென்று நந்தினியிடம் தங்க பேனாவை வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.