/tamil-ie/media/media_files/uploads/2023/06/Vairamuthu.jpg)
கவிஞர் வைரமுத்து
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி- அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும் 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இவர்கள் வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியது.
இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த சின்னத்துரை மற்றும் அவரது சகோதரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து ட்விட்டரில், “நாங்குநேரி சம்பவம்
நாட்டின் இதயத்தில்
விழுந்த வெட்டு
சாதியைக்கூட மன்னிக்கலாம்
அதற்கு
இழிவு பெருமை கற்பித்தவனை
மன்னிக்க முடியாது
சமூக நலம் பேணும்
சமூகத் தலைவர்களே!
முன்னவர் பட்ட பாடுகளைப்
பின்னவர்க்குச்
சொல்லிக் கொடுங்கள்
அல்லது
மதம் மாறுவதுபோல்
சாதி மாறும் உரிமையைச்
சட்டமாக்குங்கள்” என ட்வீட் செய்திருந்தார்.
நாங்குநேரி சம்பவம்
— வைரமுத்து (@Vairamuthu) August 14, 2023
நாட்டின் இதயத்தில்
விழுந்த வெட்டு
சாதியைக்கூட மன்னிக்கலாம்
அதற்கு
இழிவு பெருமை கற்பித்தவனை
மன்னிக்க முடியாது
சமூக நலம் பேணும்
சமூகத் தலைவர்களே!
முன்னவர் பட்ட பாடுகளைப்
பின்னவர்க்குச்
சொல்லிக் கொடுங்கள்
அல்லது
மதம் மாறுவதுபோல்
சாதி மாறும் உரிமையைச்…
பாடலாசிரியரின் இந்தக் கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில், சமூக வலைதளங்களில் செயல்பாட்டாளர்கள் பலர் வைரமுத்துவை விமர்சித்து வருகிறார்கள்
அதில் ஒருவர், “அருமையான பதிவு ஐயா இதுபோல் பி சி ஆர் சட்டத்தையும் எடுக்கணும் ஐயா” எனத் தெரவித்துள்ளார்.
மற்றொருவர், “அமரன் திரைப்படத்தில் சிங்கத்தை வேட்டையாடி சேரிக்கு போடுவான் என்று ஒரு பாடல் வரியை உங்களைப் போன்ற கவிஞர் தான் எழுதியுள்ளார்” எனத் தெரிவித்துளளார்.
இஸ்லாமிய பதிவர் ஒருவர், “ஆமாம். சாதி மாறும் உரிமையை சட்டமாக்கணும்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “மதம் மாறுவது போல சாதியும் மாறவிட்டால்
சாதி ஒருபோதும் ஒழியாதே ஐயா” என ஒருவர் கேள்வியெழுப்பி உள்ளார்.
இதற்கிடையில், “நாங்குநேரியில் கம்பெடுத்தா….,
நீதிமன்றம் தேவையில்லை………,
சூரிக்கத்தி வாழ்க……அடடா என்ன வரிகள்.?
நியாயமா வன்முறை சாதிவெறியை விதைத்த குற்றத்திற்கு
@Vairamuthu
வும் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்..!” எனத் தெரிவித்துள்ளார்.
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.