பாஜக மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் புண்ணியத் தலங்களில் கரைக்கப்படுகிறது. தமிழகத்தில் அஸ்தி கரைப்புக்கான ஏற்பாடுகளை மாநில பாஜக நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள். தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் டெல்லிக்கு சென்று, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் அஸ்தியை பெற்று வந்தார்.
முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் அஸ்தி நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தது. இந்த அஸ்தி தமிழகத்தில் உள்ள 3 நதிகளிலும், 3 கடலிலும் 6 பங்காக பிரித்து கரைக்கப்பட உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16ம் தேதி உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரின் மறைவுக்கு பின்னர் 17ம் தேதி அனைத்து அரசு மரியாதையுடன் இவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழகத்தின் 6 மாநிலங்களில் கரைக்கப்படும் வாஜ்பாய் அஸ்தி :
இதனை தொடர்ந்து அவரின் அஸ்தி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கரைக்கப்பட உள்ளது. இதற்காக அவரின் அஸ்தி சிறிய பங்குகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு மாநிலத்தில் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டது.
அந்த வகையில் தமிழகத்திர்கு 6 பாகமாக அஸ்தி பிரித்து கொடுக்கப்பட்டது. இதனை டெல்லிக்கு நேராக சென்று தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.
சென்னையில் 6 பங்குகளாக பெற்றுக்கொள்ளப்பட்ட அஸ்தி
சென்னையை நேற்று வந்தடைந்த வாஜ்பாய் அஸ்தி தற்போது தி.நகரில் உள்ள கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த 6 பங்கு அஸ்திகள் 26-ம் தேதி மதுரை வைகை, ஸ்ரீரங்கம் காவிரி, பவானி ஆகிய நதிகளிலும், சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி அகிய இடங்களில் கடலில் கரைக்கப்படும் என பாஜக தலைமையகம் தெரிவித்துள்ளது.
அஸ்தியை கொண்டுச் செல்லும் சிறப்பு வாகனம்
இதற்காக அந்தந்த மாநிலங்களுக்கு சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும். மேலும் 28-ம் தேதி அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் அஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1:20 pm : முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
12:45 pm: தமிழ்த் திரைப்பட நடிகர் ராதாரவி, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் தொழிலதிபர் வி.ஜி.பி.சந்தோஷம் ஆகியோர் மறைந்த பாரதப் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கலசத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
12:00 pm: காங்கிரஸ் தரப்பில் மூத்த தலைவரும், தமிழிசை செளந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் அஞ்சலி செலுத்தினார். திமுக.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநில தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கு ஏற்பாடுகளை கவனித்து, வருகை தந்த இதரக் கட்சித் தலைவர்களை வரவேற்றனர்.
10.45 am : தற்போது சென்னை கமலாலயத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை கமலாலயத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய முக ஸ்டாலின்
10.45 am : வாஜ்பாய் அஸ்திக்கு அலர் தூவி மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்த கனிமொழி கமலாலயம் வந்தார்.
August 2018