பழிவாங்கவே வளர்மதிக்கு குண்டர் சட்டம் : ஐகோர்ட்டில் தந்தை மனு

பழி வாங்குவதற்காகவே வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பதாக சென்னை உயர் நீதி மன்றத்தில், வளர்மதியின் தந்தை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

By: August 2, 2017, 12:55:12 PM

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவாக போரட்டத்தை தூண்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றச்சாட்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் வளர்மதி. இவர் மீது பழிவாங்கும் நோக்கத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே அவருக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு மீதான விசாரணை நாளை தள்ளிவைப்பு.

கடந்த மாதம் 12 ஆம் தேதி ( ஜூலை) சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே வளர்மதி (23) என்பவர் இயற்கை பாதுகாப்புக் குழு என்ற பெயரில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் விநியோகம் செய்தார்.

அந்த துண்டு பிரசுரத்தில் ‘மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக ஜூலை 15ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு துணை நிற்போம். மத்திய, மாநில அரசுகளே கதிராமங்கலத்தில் இருந்து காவல்துறையை வெளியேற்று, ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து வளர்மதியையும், அவருடன் இருந்த ஜெயந்தி (48) என்ற பெண்ணையும் சேலம் கன்னங்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். சேலம் வீராணத்தை அடுத்த வீமனூரைச் சேர்ந்தவரான வளர்மதி, பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்ஏ இதழியல் படித்து வருபவர் என தெரியவந்தது. அவர் மீது, அரசுக்கு எதிராக கலகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கனவே வளர்மதி மீது சிதம்பரம், குளித்தலை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே பல்வேறு வழக்குகள் இருப்பதால் வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் கடந்த மாதம் 17ம் தேதி (ஜூலை 17 ) உத்தரவிட்டார்.

இந்நிலையில் குண்டர் சட்டத்தில் அடைக்கபட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி வளர்மதியின் தந்தை மாதயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அள்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது மகள் காவல்துறையினர் கூறியது போன்ற எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை எனவும். காவல்துறையினர் அனுமதி பெற்று தான் எனது மகள் போரட்டத்தில் ஈடுபட்டார். அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் சாசனம் அனுமதி அளத்துள்ளது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஈடுபடவேண்ட தூண்டும் வையில் எந்த செயலையும் அவர் ஈடுபடவில்லை. அரசியல் காரணங்களுக்காகவும் வேண்டும் என்றே பழிவாங்க வேண்டும் என எனது மகள் மீது தவறாக காவல்துறை வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அவர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவு பிறப்பிக்கும் முன்னர் காவல்துறையினர் மனதை ஒரு நிலைப்படுத்தி இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை. அவசர கதியில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர் எனவே எனது மகள் வளர்மதிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தற்போது கோவை பெண்கள் சிறையில் உள்ள அவரை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ. செல்வம் பொன்.கலையரசன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை நாளை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Valarmathis father filed petition in chennai high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X