Advertisment

காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் குவியும் பொக்கே ஆர்டர்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள பொக்கே ஷாப்களில் ரோஜா பூ பொக்கே ஆர்டர்கள் குவிந்து வருவதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
bookeys

காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள பொக்கே ஷாப்களில் குவிந்த ரோஜா பூ பொக்கே ஆர்டர்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள பொக்கே ஷாப்களில் ரோஜா பூ பொக்கே ஆர்டர்கள் குவிந்து வருவதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

Advertisment

காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் அவர்களின் காதலர்/காதலி, கணவன்/ மனைக்கு ரோஜா பூக்களையும் சாக்லேட்களையும் அன்பளிப்பர். இதனை முன்னிட்டு கோவை அவினாசி சாலை அண்ணாசிலை பகுதியில், செயல்பட்டு வரும் நிலா பொக்கே ஷாப்பில் ரோஜா பூ பொக்கே ஆர்டர்கள் ஆர்டர்கள் அதிகரித்து வருவதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

இது குறித்து கடையின் உரிமையார்கள் கூறுகையில், காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆர்டர்கள் குவிந்து வருவதாக தெரிவித்தனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இங்குள்ளவர்களுக்கு பரிசளிக்க பூங்கொத்துகளை ஆர்டர் செய்து வருவதாக தெரிவித்தனர். 

தங்களிடம் ஆன்லைன் டெலிவரியும் இருப்பதாக கூறிய அவர்கள் வாடிக்கையாளர்கள் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படும் என தெரிவித்தனர். மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூங்கொத்துகளும் உள்ளது என்றனர். 

ஒற்றை ரோஜா"வில் இருந்து பல்வேறு வகையாக பூங்கொத்துக்கள் உள்ளது என தெரிவித்த உரிமையாளர்கள் 45 ரூபாயில் இருந்து விலை ஆரம்பம் ஆவதாக கூறினர். 

மேலும், இது தவிர ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

செய்தி: பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Valentines Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment