பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக அரசின் ரூ.1000 நிதி உதவித் திட்டம் செப்.15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் யாருக்கெல்லாம் உதவி கிடைக்கும் என்பன போன்ற தகுதி பட்டியலை ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின் விண்ணப்ப படிவங்களைப் பதிவு செய்யும் முகாமை மு.க. ஸ்டாலின் 24.7.2023 அன்று தருமபுரி தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட முகாம்கள் ஆக.5ஆம் தேதி தொடங்கின. இந்த முகாம்கள் 16ஆம் தேதிவரை நடைபெறுகின்றன.
இந்த முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தற்போது, உறுதிமொழிகளில் இடம்பெற்றுள்ளது சரியான தகவல்தானா என்பதை அறிந்துகொள்ள கள ஆய்வுக்காக ஆட்கள் வருவார்கள் என்று அரசு குறிப்பிட்டு உள்ளது.
அதில் தவறான தகவல்களை நீங்கள் வழங்கி இருந்தால், 11 வது உறுதிமொழியில் இருப்பதைபோல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“