வால்பாறையில் பட்டப் பகலில் சிறுத்தை தாக்கி பசு மாடு உயிரிழப்பு

வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதியில் முகமிட்டு இன்று சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதியில் முகமிட்டு இன்று சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Valparai

Valparai Cheetah killed cow in nadumalai estate

வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்தின் அருகில், காட்டில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது.

Advertisment

வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளி  மாரியம்மாள், இவர் வளர்த்த பசுமாடு அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை (மார்ச் 31) பிற்பகல் 3 மணி அளவில் அங்கு திடீரெனெ வந்த சிறுத்தை மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை அடித்துக் கொன்றது.

இரவு ஆறு மணி ஆகியும் வீடு திரும்பாத மாட்டை தேடி  சென்றபோது அப்பகுதியில் சாலை ஓரத்தில், சிறுத்தை தாக்கி மாடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு வனத்துறை சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர், பிறகு உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் வெப் கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

Advertisment
Advertisements

இன்று காலை பார்த்த போது அப்பகுதியில் இருந்த மாட்டை சிறுத்தை சரிவுக்கு இழுத்துச் சென்றது. இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதியில் முகமிட்டு இன்று சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் மேய்ச்சல் நிலப்பகுதியில் நிர்வாகத்திற்கு சொந்தமான ஆற்றோரப் பகுதிகளில் புதர் மண்டி இருப்பதால் இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என வனத்துறை, நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மாட்டை சிறுத்தை அடித்துக் கொன்றதால் மாட்டின் உரிமையாளர் வனத்துறை நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: