கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த நல்ல காத்து எஸ்டேட் கரும்பாலம் பகுதியில் சோலையார் எஸ்டேட் உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர் துரைராஜ் வயது 51.
Advertisment
இவர் இன்று காலையில் வழக்கம் போல நடைபயிற்சி சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானை ஒன்று அவரை தள்ளியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அலற சத்தம் கேட்டு உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினர்.
தேயிலைக் காட்டில் சுற்றி திரியும் காட்டு யானை யானை தாக்கியதில் காயமடைந்த துரைராஜ்
அங்கு துரைராஜூக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காலையில் நடைப்பயிற்சி சென்றவரை காட்டு யானை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யானையிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கிராமத்தினர் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.