பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Elephant-attack: கோவை மாவட்டம் வால்பாறையை ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பி.பி.டி.சி-க்கு சொந்தமான முக்கோட்முடி எஸ்டேட் உள்ளது. இதன் முதல் பிரிவு பகுதியில் நள்ளிரவு 3 மணி அளவில் 9 யானைகள் சேர்ந்த யானைக் கூட்டம் தேயிலைத் தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் கமலம் குடியிருப்பை உடைத்துள்ளன. மேலும், வீட்டில் இருந்த சிலிண்டர் மற்றும் பெட் சீட் வீட்டு உபயோகப் பொருட்களை அள்ளி வெளியே வீசி தூம்சம் செய்துள்ளது.
நல்வாய்ப்பாக அவர்களுடைய மகள் பிரசவத்திற்காக ஊருக்கு சென்று விட்டார்கள். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு பார்த்த போது, யானைக் கூட்டம் வீட்டை இடித்து தள்ளிக் கொண்டு இருந்தது.
இதனையடுத்து, குடியிருப்பு வாசிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலையில், யானைக் கூட்டத்தை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
யானைக் கூட்டம் இந்தப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இரவில் உறங்குவது கூட பயந்த நிலையில் உறங்க வேண்டிய அவல நிலை உள்ளது. தற்போது வால்பாறை பகுதிக்கு அதிக அளவில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“