கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையானது ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது.இங்கு மலைப்பகுதியில் சாலை ஓரங்களில் இந்தியாவிலேயே அதிக அளவில் மாநில விலங்கான வரையாடுகள் அதிக அளவில் காணப்படும் பகுதியாக அமைந்துள்ளது
வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் தமிழகம், கேரளம் மற்றும் இந்தியாவில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வால்பாறை செல்வது வழக்கமாக இந்த மலை பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் அங்கு சாலை ஓரங்களில் நின்று கொண்டிருந்த வரையாடுகளை கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் துன்புறுத்தி புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் இதனை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.
இதனைப்பார்த்த வனத்துறையினர் நேற்று அந்த நாட்களில் பயணம் செய்த வாகனங்களை வனத்துறை ஆழியார் சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து, அந்த வாகனத்தின் பதிவு எண் கேரளாவை சேர்ந்தது என தெரிந்து கொண்டு கோட்டையம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இனி வரும் காலங்களில் மாநில விலங்கான வரையாடுகளை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/