/tamil-ie/media/media_files/uploads/2022/04/vanathi-srinivasan-mk-stalin.jpg)
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
பாரதிய ஜனதா எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் பேசுகையில், “நாங்கள் விவசாயிகளோடு உணர்வுகளோடு, நலன்களோடு உண்மையாக நாங்கள் நிற்கிறோம். இந்தப் பிரச்னையில் நிரந்தர தீர்வு என்ற நகர்வுதான் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
ஆகவே இந்த தீர்மானத்தில் நதிகள் தேசியமமாக்கல் மற்றும் அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு என்ற வார்த்தையும் சேர்த்து இருக்க வேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் சொல்லும் பிரச்னை வேற, காவிரி நீர் வேண்டும்மா? வேண்டாமா? உங்கள் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை மட்டும் சொல்லுங்கள் போதும்” என்றார்.
இதற்குப் பதிலளித்த வானதி சீனிவாசன், “ஒரு பிரச்னைக்கு பிட்டுப் பிட்டாக சொலுசன் (தீர்வு) கொடுக்க இயலாது” என்றார். தொடர்ந்து, “நிரந்தர தீர்வை நோக்கி நகர வேண்டும்” என்றார்.
அப்போது மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “காவிரி தண்ணீர் அவங்க திறக்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கீங்க. அப்படி எடுத்துக்கொள்ளலாமா என்றார்.
இதற்கு உடனடி பதில் கொடுத்த வானதி, “அப்படி இல்லை, நிச்சயமாக இல்லை” என்றார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற சூழல் எழவே இல்லையே” என்றார்.
தொடர்ந்து வானதி சீனிவாசன் பேசும்போது பல இடங்களில் சப்தம் வரவில்லை. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அவை முன்னவர் துரைமுருகனை பேச அழைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.