சவுக்கு சங்கர் மீது கஞ்சா கேஸ்: பழைய நடைமுறையை தமிழக அரசு கையில் எடுத்து உள்ளது: வானதி சீனிவாசன் பேட்டி

சவுக்கு சங்கர் மீது கஞ்சா கேஸ் போடும் பழைய நடைமுறையை தமிழக அரசு கையில் எடுத்து உள்ளது என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

சவுக்கு சங்கர் மீது கஞ்சா கேஸ் போடும் பழைய நடைமுறையை தமிழக அரசு கையில் எடுத்து உள்ளது என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

சவுக்கு சங்கர் மீது கஞ்சா கேஸ் போடும் பழைய நடைமுறையை தமிழக அரசு கையில் எடுத்து உள்ளது என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்பாக தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது : தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக உள்ளது.இந்தியாவிலேயே ஈரோடு, சேலம் மாவட்டத்தில் வெயில் அதிகமாக பதிவாகி வருவது அபாயமானது.தமிழ்நாட்டிற்குதொழிற் சாலை வளர்ச்சி, நகர் மையம் ஆக்குதல் போன்றவை முக்கியம் என்றாலும் அதனை சுற்றுச் சூழல் உடன் இணைத்து செய்ய வேண்டும். பல்வேறு அமைப்புகள் மரம் வளர்த்தல், நிலத் தடி நீர்மட்டம் உயர்த்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவர்களைஒன்றிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மரம் நட்டு பாதுகாக்க வேண்டும். புவி வெப்பமடைதல் தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு நீக்க நிதி ஒதுக்கீடு போதாது. லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது.அதனை கண்காணிக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். தெற்கு தொகுதியில் 20 லிட்டர் இயந்திரங்கள் அமைத்து குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

sasa

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்காமல் இருப்பது சிரமமாக உள்ளது.கல்லூரி அட்மிஷன் போன்றவைக்கு எம்.எல்.ஏ.,வை தேடி பொதுமக்கள் வருகின்றனர். எனவே, தேர்தல் முடிந்த இடங்களில் தேர்தல் ஆணையம் விதிமுறைகள் தளர்த்தி சட்டமன்ற அலுவலகங்கள் திறக்க ஏற்பாடு செய்ய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்சினையை தி.மு.க அரசு பேசுவதில்லை.சவுக்கு சங்கர் பா.ஜ.க வையும் மற்றும் என்னையும், விமர்சனம் செய்து இருக்கிறார்.

Advertisment
Advertisements

கஞ்சா கேஸ் போடும் பழைய நடைமுறையை அரசு கையில் எடுத்து உள்ளது.சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்பது உண்மையா ? என எனக்கு தெரியாது. நான் அவருக்கு வக்காளத்து வாங்க பேசவில்லை.தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய போதிய நிதியை அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் எங்கு வாக்கு சதவீதம் குறைகிறது என பார்த்து வருகிறது.வாக்களிப்பது கட்டாயம் என ஏற்படுத்த வேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது.பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும்.தெற்கு தொகுதியில் ஏன் வாக்கு சதவீதம் குறைந்து உள்ளது குறித்து தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது.நகர் பகுதியில் வாக்காளர்கள் பட்டியலில் இரண்டு அட்டை வைத்து இருப்பவர்கள் இருக்கிறார்கள்.அதனை கண்காணித்து சரி செய்ய வேண்டும்.கணவருக்கு ஒரு பூத், மனைவிக்கு ஒரு பூத் என இல்லாமல் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரே பூத் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். அடுத்த தேர்தலுக்குள் சரி செய்ய வேண்டும்.

பொள்ளாச்சியில் தென்னை மரங்கள் காய்ந்து உள்ளது. தென்னை மரங்களை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.பெண்களுக்கு எதிராககுற்றம் சாட்டப்பட்டு இருந்தால் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி செய்ய வேண்டும்.மேலும், தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் கிடந்த மது பாட்டில்கள் குறித்து பதிலளித்தவர், சட்டமன்ற அலுவலகம் திறக்காமல் விட்ட சில நாட்களில் சமூகவிரோதிகள் எங்கள் அலுவலகத்தை டாஸ்மாக் கடை பார் ஆக்கி விட்டார்கள் என தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: