Advertisment

தி.மு.க - பா.ஜ.க ரகசியக் கூட்டணியா? வானதி சீனிவாசனின் லாஜிக் பதில்

அரசியல் களத்துக்கு வந்து உள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் என்றும் அரசாங்கங்களுக்குள் இருக்கும் உறவை அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது என்றும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Vanathi Srinivasan

, “தமிழகம் இது போன்ற நூற்றுக் கணக்கான கொடிகளையும், தலைவர்களையும் பார்த்து இருக்கிறது. புதிதாக அரசியல் களத்தில் போட்டியாளராக சக அரசியல்வாதியாக களம் கண்டு உள்ள நடிகர் விஜய்க்கு பா.ஜ.க சார்பில் வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறோம் என பதிலளித்தார். 

பா.ஜ.க - வுடன் தி.மு.க ரகசிய கூட்டணியில் இருப்பதாக அ.தி.மு.க தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் அரசாங்கங்களுக்குள் இருக்கும் உறவை அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது என பா.ஜ.க மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

Advertisment

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி கல்லூரி மாணவ - மாணவிகளுக்கான கைத்தறி ஆடை அணி வகுப்பு போட்டி நடைபெற்றது. இதில் கண்களை கவரும் வகையில் வித விதமான வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட கைத்தறி ஆடைகளை அணிந்தபடி மாணவ - மாணவிகள் ஒய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தனர். பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் நடிகை நமீதா ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். முன்னதாக இருவரும் கைகளை கோர்த்தபடி  அணி வகுப்பு மேடையில் நடந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். 

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்: "கைத்தறி நெசவு குறித்து கல்லூரி மாணவ - மாணவிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 7 - வது ஆண்டாக கைத்தறி நெசவு ஆடை அணிவகுப்பு போட்டிகளை நடத்தி வருகிறோம். இதன் மூலம் கைத்தறி நெசவு குறித்த பாரம்பரியம், ஏன் கைத்தறி நெசவாளர்களை ஆதரிக்க வேண்டும், கைத்தறி நெசவு உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவ - மாணவிகளுக்கு விளக்கம் அளித்து வருகிறோம், ஆண்டுதோறும் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளில் பங்கேற்கும் மாணவ - மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இந்த ஆண்டில் மட்டும் 2,490 மாணவ - மாணவிகள் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளில் பங்கேற்று உள்ளனர்‌. கைத்தறி ஆடைகளை விட்டு மக்கள் விலகிச் சென்று விட்ட நிலையில் மீண்டும் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என தெரிவித்தார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தி உள்ளது  குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “தமிழகம் இது போன்ற நூற்றுக் கணக்கான கொடிகளையும், தலைவர்களையும் பார்த்து இருக்கிறது. புதிதாக அரசியல் களத்தில் போட்டியாளராக சக அரசியல்வாதியாக களம் கண்டு உள்ள நடிகர் விஜய்க்கு பா.ஜ.க சார்பில் வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறோம் என பதிலளித்தார். 

கோவைக்கு அ.தி.மு.க அரசு கொண்டு வந்த திட்டங்களைத் தான் தி.மு.க அரசு தற்போது திறந்து வைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, “கோவையில் கட்டப்பட்டு உள்ள மேம்பாலங்கள், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கடந்த ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு இருந்தாலும் தற்போது பணிகள் முடிக்கப்பட்டு தி.மு.க அரசால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கோவைக்கு  செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட நிறைய திட்டங்கள் அறிவித்து உள்ளனர். கோவைக்கு தி.மு.க அரசு அறிவித்து உள்ள திட்டங்களை எவ்வளவு விரைவில் முடிக்கிறார்கள் என்பதை பொறுத்து அது குறித்து கருத்து கூற முடியும்” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தி.மு.க - பா.ஜ.க உடன் ரகசிய கூட்டணி வைத்து உள்ளதாக எழுந்து உள்ள விமர்சனத்திற்கு, அரசாங்க நிகழ்வுகளை கூட்டணி பார்வையில் பார்ப்பது தவறானது. அ.தி.மு.க வோடு கூட்டணியில் இல்லாத கால கட்டத்தில் கூட பா.ஜ.க வின் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் அரசு விழாக்களில் பங்கேற்று இருக்கிறார்கள். *அரசியல் களத்துக்கு வந்து உள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் ; அரசாங்கங்களுக்குள் இருக்கும் உறவை அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது - பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் லாஜிக்காக பதிலளித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanathi Srinivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment