scorecardresearch

காங்கிரஸ், தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர் கமல்: வானதி தாக்கு

காங்கிரஸ், தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளார் என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சாடினார்.

Vanathi srinivasan MLA
Vanathi srinivasan MLA

கோவை பந்தய சாலையில் உள்ள கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அத்தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோடை கால இலவச நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா?. தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி உள்ளது. மாநில அரசாங்கத்தின் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தான் கவலைப்படுகிறார்கள்.

கோவையில் 15 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனை சரியாகும் என்றார்கள். எவ்வித நடவடிக்கையும் இல்லை. மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்றார்கள். நான் ஏற்கனவே இந்த தொகுதியில் தோல்வி அடைந்து பணி செய்தேன். ஊழல் கறை படிந்த காங்கிரஸ், தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளராக கமல்ஹாசன் உள்ளார்.

பா.ஜ.கவை பொறுத்தவரையில் கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவோம். பாரதிய ஜனதா கட்சியினுடைய வெற்றி வாய்ப்பு கர்நாடகாவில் பிரகாசமாக உள்ளது. கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. பாஜகவில் எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் பாதிப்பு வராது. தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். உள்துறை அமைச்சர், பிரதமர் அங்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மை உடன் வெற்றி பெரும்.
தமிழ் தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார். இனி அதனை மீண்டும் பேச வேண்டாம்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vanathi srinivasan mla attacks kamalhasan

Best of Express