vanathi-srinivasan | கோவை பாஜக மாவட்ட அலுவலகத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது பேசிய வானதி சீனிவாசன், கடந்த இரண்டு தினங்களாக காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகுவின் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரை நடந்த சோதனைகளை விட அதிகமான அளவில் 300 கோடிக்கு மேல் பணம் இருப்பது தெரியவந்துள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னையை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. ஆனால் அமைச்சர்கள் முன்னுக்கு பின் மாற்றி மாற்றி பேசுகிறார்கள்.
அன்று 95 சதவீத பணிகள் நடந்து முடிந்துவிட்டன என்றார்கள். அப்புறம் இல்லை என்கிறார்கள். ஆக, மக்களிடம் ஏமாற்று நாடகத்தை திமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே பாஜக சார்பில் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வேண்டும் என கேட்டு இருந்தோம். மிக்ஜாம் நிவாரண தொகை 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்தத் தொகையை ரேஷன் கடைகளில் ரொக்கமாக தரும் நடவடிக்கையை கைவிட வேண்டும். வங்கியில் நேரடியாக செலுத்த வேண்டும். இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களின் நேரம் மிச்சப்படும்” என்றார்.
தொடர்ந்து, “மின் கட்டண உயர்வு அனைத்து தொழில்களையும் பாதித்திருக்கிறது. இது குறித்து முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். விரைவில் கோவை-பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை வர உள்ளது என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“