கோவை புலியகுளம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கும் அட்டையை வழங்கினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், "பிரதமர் மோடி பாஜகவில் இணையுமாறு வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் நான்கு கோடி உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர். தொகுதியில் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கு பூத்து ஒதுக்கப்பட்டு அதில் உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.
வீடு வீடாக சென்று உறுப்பினர்கள் சேர்த்து வருகிறோம். கட்சியில் அதிக அளவில் பெண்கள் சேர்ந்திருப்பது மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. வரக்கூடிய நாட்களில் கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பது தீவிரமாக நடைபெறும். முதன் முதலில் தொழில்நுட்ப அரசியல் கட்சியாக செயல்படுவது பா.ஜ.க தான்.
ஜி.எஸ்.டி தொடர்பாக குழு அமைக்கப்பட்டு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அது குறித்து விரைவில் மத்திய அரசு அறிவிக்கும். மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து தான் ஜி.எஸ்.டி குறித்து முடிவு எடுக்கிறார்கள். இது தொடர்பாக மாநில நிதி அமைச்சர் சந்தித்துள்ளார்கள். விவசாயம் மற்றும் கோவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர்.
ரேஷன் கார்ட்டில் போலியாக நபர்கள் சேர்ப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அது ஏழைகளுக்காக வழங்கப்படுகிறது கார்டு என்றும் மாநில அரசு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்கவுண்டர் செய்தால் பொதுமக்களை சமாதானம் செய்ய முடியும் என்று தி.மு.க அரசாங்கம் அமைத்து வருகிறது. 2019-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடியை காங்கிரஸ் குறை கூறி வருகிறது. ஆனால் தமிழக மக்கள் மீது நலன் இல்லாமல் மத்திய அரசை மட்டுமே குறை கூறி வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம், ஆனால் ஏமாற்றம் பொதுமக்களுக்கு தான் இருக்கும். சாதிவாரி கணக்கெடுப்பை தாராளமாக மாநில அரசு நடத்தலாம். ஆனால் மத்திய அரசை குறை சொல்கிறார்கள். மத்திய கல்விக் கொள்கையை மட்டும் மாநில அரசின் கீழ் செயல்படுத்த வேண்டும் என்று திமுக கூறுவது எந்தவிதத்தில் நியாயம் இல்லை.
பெண்களுக்கு எதிராக பட்டியிலன மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை திமுக அரசு கண்டும் காணாமல் கடந்து செல்கிறது. ஆனால் சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவு போட்டால் அவர்களை உடனடியாக கைது செய்கிறார்கள்.
மத்திய அரசு கொடுக்கின்ற நிதிகளை மாநில அரசு திரும்பி அனுப்புகிறது. ஆனால் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று தொடர்ச்சியாக தி.மு.க அரசு கோரிக்கை வைத்து வருகிறது. நொய்யல் ஆற்றில் நேரடியாக மனித கழிவுகள் கலந்து கொண்டிருக்கிறது.இந்த மாதிரியான விஷயங்களை மனித கழிவு கலக்கும் இடங்களில் மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.